மாநில அளவிலான இணையவழி இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ / மாணவியர்களின் விவரம் - DOWNLOAD HERE

நூற்றாண்டு விழா– 2022

மாநில அளவிலான இணையவழி போட்டிகள்

    திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பது பழமொழி, தெய்வம் துணை செய்யும் போது மனிதர் மூலமே செயல்படுகிறது. அதுவும் தன் கருவியாக கருணை உள்ளத்தையே கொண்டு செயல்படுகிறது.

    சிறுபிள்ளைகள் உணவுக்கும் கல்விக்கும் ஏங்கி நிற்கும்போது, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களைத் தன்னம்பிக்கையோடு வாழ வகைசெய்ய 1905ஆம் ஆண்டு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், மகானும், தீர்க்கதரிசியுமான சுவாமி ராமகிருஷ்ணானந்தரால் 'ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்' ஆரம்பிக்கப்பட்டது.

        இதன் ஒரு பகுதியாக நமது தேசத்தின் பாரம்பரிய கல்வி முறையான குருகுல முறையை மையமாகக்கொண்டு , இல்லத்தின் கொள்கைகளாகிய தியாகம், தொண்டு ஆகிய நற்பண்புகளை மாணவர்களுக்கு புகுத்தவும், மேலும் கல்வியுடன் சேர்ந்த தேசப்பற்று, சமூகநலன், இந்திய பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை வழங்கும் வகையில் ஒரு முழுமையான கட்டமைப்புடன் 1922ஆம் ஆண்டு துவங்கி எமது ராமகிருஷ்ண மிஷன் உறைவிட உயர்நிலைப்பள்ளியானது நூறாண்டுகளை தொட்டு தற்போது 250 மாணவரகளை உள்ளடக்கி தனது கல்வி பணியை செவ்வனே செய்துவருகிறது.

    எமது பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும்  இணையத்தின் வழியாக பேச்சுப்போட்டி மற்றும் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்த அழைப்பை ஏற்று தங்கள் பள்ளி மாணவர்களை போட்டியில் கலந்து கொள்ள ஊக்குவிக்குமாறு கேட்டுகொள்கிறோம். 

என்றும் இறைப்பணியில்
சுவாமி சத்யஞானானந்தர்
(செயலர்)

போட்டிகள்விவரம்

குழு – 1 (6ஆம்வகுப்புமுதல் 8 ஆம்வகுப்புவரை)

போட்டிகளின் விவரம்

குழு – 1 (6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை)

தலைப்பு

பதிவுகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்

பேச்சுப்போட்டி

சுவாமி விவேகானந்தர் கண்ட எதிர்கால இந்தியா

30.06.2022

ஒப்புவித்தல்போட்டி

சுவாமிஜியின் பொன்மொழிகள் - 50

30.06.2022

      

பொன்மொழிகள் 50 –யை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Click Here to Download


குழு – 2 (9ஆம்வகுப்புமற்றும்10 ஆம்வகுப்புவரை)      

போட்டிகளின் விவரம்

குழு – 2 (9ஆம் வகுப்புமற்றும்  10 ஆம் வகுப்புவரை)

தலைப்பு

பதிவுகளை அனுப்பவேண்டியகடைசிநாள்

பேச்சுப்போட்டி

சுவாமிவிவேகானந்தர்கண்டஎதிர்காலஇந்தியா

30.06.2022

ஒப்புவித்தல்போட்டி

சுவாமிஜியின்சிக்காக்கோசொற்பொழிவு

30.06.2022


போட்டியில்பங்குபெறுவதற்கானவிதிமுறைகள்:

·  பேச்சுப்போட்டி மற்றும் ஒப்புவித்தல் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அறிவிப்புகளை 14.06.2022 முதல் Registration Form Link–யை பயன்படுத்தி படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

·  பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30.06.2022 மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளுக்கு பின் அனுப்பப்படும் காணொளிகள் போட்டிகளுக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

·  தங்களது காணொளிகளை பதிவேற்றம் செய்யும் போது காணொளிகள் MP4 வடிவம் கொண்டவையாக இருத்தல் வேண்டும்.

(குறிப்பு : பேச்சுப்போட்டிக்கு அனுப்பக்கூடிய காணொளிகள் குறைந்தது 3 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை இருத்தல் வேண்டும்.)

·  குழு 1 (6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை) –ல்  100 மாணவர்களுக்கு மேல் பங்கு பெற்றால் 4 பிரிவுகளாக பிரிக்கப்படும்.  25 மாணவர்களுக்கு ஒரு பிரிவாக அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

·  குழு 2 (9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு வரை)–ல்  100 மாணவர்களுக்கு மேல் பங்கு பெற்றால் 4 பிரிவுகளாக பிரிக்கப்படும். 25 மாணவர்களுக்கு ஒரு பிரிவாக அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

      ·  போட்டியில் பங்கு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் (Participation Certificate) வழங்கப்படும். தாங்கள் விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது சான்றிதழ் அனுப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

·  மேற்குறிப்பிட்டுள்ள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள் எங்களது https://www.rkmshome.org.in/ என்ற இணையதள வாயிலாக 05.07.2022 அன்று அறிவிக்கப்படும்.

பரிசுவிவரங்கள்:

போட்டிகள்

முதல் பரிசு

இரண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு

பேச்சுப்போட்டி

ரூ.1000 /-

ரூ.500 /-

ரூ.250 /-

ஒப்புவித்தல் போட்டி

ரூ.1000 /-

ரூ.500 /-

ரூ.250 /-

      

சந்தேகங்களுக்குதொடர்புகொள்ள

திரு. ஜானகிராமன், தமிழ் ஆசிரியர் (போட்டி ஒருங்கிணைப்பாளர்)  80123 48988, 99438 88173

திரு. முத்துக்கண்ணன், ஆங்கில ஆசிரியர்  96558 69169, 63829 45585

குறிப்பு : போட்டிகள் தொடர்பான எந்த மாறுதல்கள் நிகழ்தாலும் அதில் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

             
      

© 2024 Built on Cloud by Web Team of Ramakrishna Mission Students' Home in